விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு அளிக்கவில்லை என கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எனவே, கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.