அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிப்பு

செவ்வாய், 19 மே 2020 (18:26 IST)
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டதாகவும், அதிமுக ஊராட்சி கழக செயலாளர்களின் பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌பிரிவுச்‌ செயலாளர்‌ மற்றும்‌ துணை நிர்வாகப்‌ பொறுப்புகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ அனைவரும்‌ இன்று முதல்‌ அவரவர்‌ வகித்து வரும்‌ பொறுப்புகளில்‌ இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்‌. கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌ பிரிவின்‌ நிர்வாக வசதியைக்‌ கருத்தில்‌ கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மண்டலம் பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
 
சென்னை மண்டலம்‌
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்‌
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்‌
வட சென்னை தெற்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை வடக்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை தெற்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ கிழக்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மத்திய மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மேற்கு மாவட்டம்‌
திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌
திருவள்ளூர்‌ மேற்கு மாவட்டம்‌

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலமாக பிரிப்பு.....

மதுரை மண்டலம் -@satyenaiadmk
சென்னை மண்டலம்-அஸ்பயர் ஸ்வாமிநாதன்
வேலூர் மண்டலம் @KovaiSathyan
கோவை மண்டலம்- @RamaAIADMK

ஆகியோர் தகவல் ‌ தொழில்நுட்ப பிரிவு செயலாளராக அறிவிப்பு....... pic.twitter.com/yo07No6dH8

— அம்மா முகநூல் பாசறை (@ammamuganoolpa1) May 19, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்