நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மனு..

Arun Prasath

சனி, 4 ஜனவரி 2020 (15:09 IST)
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது எனவும் எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக அரசையும் எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்