வரலாறு காணாத சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு.. முழு விவரங்கள்..!

Mahendran

புதன், 3 செப்டம்பர் 2025 (18:48 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தனது வரலாற்றிலேயே மிக குறைந்த நிலையை தொட்ட பிறகு, இன்று 3) 9 காசுகள் அதிகரித்து ₹88.06 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. உள்நாட்டு பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்தது ஆகியவை இந்த உயர்விற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக கட்டணங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறியது ஆகியவை ரூபாயின் மதிப்பை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைத்தன என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 
இன்று வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ₹88.15க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக ₹87.98 ஆகவும், குறைந்தபட்சமாக ₹88.19 ஆகவும் வர்த்தகமானது. இறுதியில், 9 காசுகள் உயர்ந்து ₹88.06 ஆக முடிந்தது.
 
நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து ₹88.15 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்