விழா மேடையில் நாற்காலிக்கு அடித்துக்கொண்ட அதிமுகவினர்

ஞாயிறு, 23 ஜூலை 2017 (17:24 IST)
திருப்பூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நாற்காலியை பிடிக்க சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், உடுமலை ராதாகிருஷ்ணனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இதில் தமிழக முதல்வர், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு அதிமுக அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். விழா அரங்கில் அமர்ந்திருந்த சபாநாயகர் அருகில் இருந்த நாற்காலியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அமர முற்பட்டார். 
 
அப்போது வேகமாக விரைந்து வந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயராமனை பின்னால் இருக்கும் நாற்காலியில் சென்று அமருமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விழா மேடை சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. பின் இருவரையும் மற்ற அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்