கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் பிள்ளைகள் பேரிலும் அதிக சொத்து வாங்கியதாக அவரது மனைவி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.27,22,56,736 சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 4.8 கிலோ தங்கம் சிக்கியது. ரூ.24 லட்சம் ரொக்கம், 3.75 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.