குன்னூரில் தேர்தலுக்கு கோழிக்குஞ்சு சப்ளை?! – பறிமுதல் செய்த பறக்கும் படை!

புதன், 3 மார்ச் 2021 (17:14 IST)
தேர்தல் கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில் குன்னூரில் தேர்தல் பரிசாக கோழிக்குஞ்சுகள் வழங்கியபோது பறக்குபடையினர் பிடித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் என்ற கணக்கில் அரசியல் கட்சியினர் சிலர் கோழிக்குஞ்சுகளை விநியோகித்து வருவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடம் விரைந்த பறக்கும்படையினர் அவர்களிடமிருந்த சுமார் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்