சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகையில், கட்சியில சாதாரணமாவர்களை கூட எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சிலருக்கு அமைச்சர் கூட வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் தங்களது விசுவாசத்தை திமுக பக்கம் காட்டியுள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. யாரு, என்ன செஞ்சீங்க, என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? என எல்லாமே எனக்கு தெரியும். அந்த கறுப்பு ஆடுகளை களையெடுக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்த தொகுதியில் உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகள் குறித்து, உளவுத்துறை மூலம் தகவல் திரட்டியுள்ளனர். அவர்களது லிஸ்ட் முதல்வர் ஜெயலலிதா கையில் ரெடியாக உள்ளதாம்.
ஆக, கறுப்புகளை களையெடுக்க முதல்வர் ஜெயலலிதா தயராகிவருகிறார். இதனால், அதிமுகவில் அலறல் குரல் ஒலிக்கிறது.