தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து பேசி பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது என விமர்சித்தார்.