வேதா இல்லம் வழக்கு: மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு

புதன், 1 டிசம்பர் 2021 (18:27 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா எல்லாம் சமீபத்தில் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்
 
இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்த நிலையில் வேதா இல்லத்தை தீபக் ஏற்றும் தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது
 
மேல்முறையீடு செய்ய தமிழக அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விளக்கமளித்துள்ளார்
 
மேலும் நினைவு இல்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என தனி நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் இந்த உத்தரவு அதிமுக தொண்டர்களை புண்படுத்தி உள்ளது என்றும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்