கோடிகளின் கணக்கு என்ன? கப்சிப் திமுக, கட்டம் கட்டும் அதிமுக - தேமுதிக!

திங்கள், 30 செப்டம்பர் 2019 (14:47 IST)
கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.25 கோடி வழங்கியது குறித்து பதில் அளிக்கும்படி ஸ்டாலினுக்கு பிரேமலதா மற்றும் ஜெயகுமார் கேட்டு வருகின்றனர். 
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தேமுதிக படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
 
இது குறித்து திமுக தரப்பில் எந்த ஒரு மறுப்போ, விளக்கமோ அளிக்கப்படாத நிலையில், தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வந்த தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக தரப்பிலும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் திமுக ரூ.25 கோடி அளவுக்கு பணம் கொடுத்திருக்கிறது. எனவே மத்திய அரசும் சிபிஐயும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒரே கூட்டணியை சேர்ந்த அதிமுக - தேமுதிக இடைத்தேர்தல் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பணம் கொடுத்த விவகாரத்தை பெரிதுபடுத்த நினைப்பதால் திமுக சற்று கலக்கத்தில் உள்ளாதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்