பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது? வாய் மலர்ந்த ஓபிஎஸ்!!
திங்கள், 30 செப்டம்பர் 2019 (08:54 IST)
பொன்னார் அதிமுகவிறகு ஆதரவு கொடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என கூறிய நிலையில் பாஜவுடன் கூட்டணி எப்போது முறிந்தது? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
ஆனால், அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான பாஜகவிடம் இதுவரை அதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்கவில்லை. இனிமேலும் ஆதரவு கேட்பார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜகவிடம் ஆதரவு கேட்பீர்களா ஓபிஎஸ் இடம் கேட்கப்பட்ட போது அவர், எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவை கேட்டிருக்கிறோம். அவர்கள் உறுதியாக எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என பட்டும் படாமல் பதில் அளித்தார்.
அதன் பின்னர் சமீபத்தில் பாஜக முக்கிய தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், நாங்கள் நாங்குநேரி தொகுதியை கேட்கவில்லை. அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஸ், பாஜகவுடன் கூட்டனி எப்போது முறிந்தது? பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் இந்த கூட்டணி தொடரும் என பதில் அளித்து, சர்ச்சைகளுக்கு முற்றிபுள்ளி வைத்துள்ளார்.