ஆனாலும் விஜயகாந்த் நண்பகல் 12 மணிக்கே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். விஜயகாந்த் வந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நள்ளிரவில் இருந்து நண்பகல் வரை அவருக்காகக் காத்திருந்தனர். 12 மணிநேரமாக விஜயகாந்த் விமான நிலையத்தில் என்ன செய்தார் என விசாரித்ததில் ‘ பயணக்கலைப்பு காரணமாக விஜயகாந்தை இரவு விமான நிலையத்திலேயே தங்கவைத்த்துள்ளனர். கலைப்பில் உறங்கியவர் காலை 11 மணிக்கே எழுந்திருக்கிறார். அதன் பின்னே அவர் பேட்டரி கார் மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்’ என்ற தகவல் கிடைத்துள்ளது.