’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

Mahendran

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (19:03 IST)
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக, டிடிவி தினகரன் இந்த கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சமீபத்தில் தான் அவர் மீதான வழக்கை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில், ஓ பன்னீர்செல்வம்  அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிச்சாமி அனுமதிப்பாரா என்ற கேள்விக்குறியாக உள்ளது. 
 
இந்த நிலையில், கோவை கணபதியில் உள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து, இன்று வீடு திரும்பினார். 
 
அப்போது செய்தியாளர்கள் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுமா என்று கேட்டபோது, "இன்று விடுமுறை" என்று மட்டும் தெரிவித்து, அவர் புறப்பட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்