மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

சனி, 12 ஜூன் 2021 (15:48 IST)
பாலிடெக் மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்காக நடைமுறைகளை பள்லிக் கல்வித்துறை செய்துள்ளது.

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா பரவியபோது, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. அவ்வப்போது மாநிலத்திற்கு மாநிலம் கொரொனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்  இந்தியாவில் இரண்டாவது கொரொனா தீவிரமடைந்த நிலையில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த நிலையில்,வரும் 14 ஆம் தேதி முதல் பள்ளிகளில்ன்  மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அத்துடன்  14 ஆம் தேதி முதல் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த அடிப்படையில் பொறியியல்  படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்