பின்னர் பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன், இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்க கூடியது என்றும், அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாத தனியார் கோவில் இது என்றும் கூறிய அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த முறையான அனுமதி பெற்றார்களா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டதா என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வரிடம் ஆலோசித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கபடும் என்றார்.