தென்னிந்திய சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால், காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு உரிய பதவிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கவில்லை என கூறப்பட்ட நிலையில் கடந்தாண்டு பாஜகவில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி தோல்வியுள்ளார்.
இந்நிலையில் , நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி டிஜிபி டிஜிபியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்தார்