இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான விஜயகாந்த் மறைவு வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூகசேவை ஆகியவற்றீல் அவர் சிறப்பான பங்களிப்பு நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.