நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருகிறார்: இளைஞர்கள் கட்சிக்கு தலைமை தாங்க தயார்!

புதன், 1 பிப்ரவரி 2017 (08:43 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பல்வேறு நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டாலும் ராகவா லாரன்ஸ் தான் அனைவராலும் உற்றுப்பார்க்கப்பட்டவர்.


 
 
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களோடு கலந்துகொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் உணவுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் வாரை இதற்கு செலவிட உள்ளதாக அவர் அறிவித்தது பலரிடமும் வரவேற்பை பெற்றது.
 
உடல் நலம் சரியில்லாமல் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து மருத்துவமனையும், போராட்டக்களமுமாக இருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரத்தில் முடிவடைந்ததையடுத்து ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் விமர்சிக்கப்பட்டார்கள்.
 
இந்நிலையில் தான் தேவைப்பட்டால் அரசியலுக்கு வர தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ். இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் நிற்போம். நான் அரசியலில் வர வேண்டுமா, இல்லையா என்பது பற்றி இளைஞர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
என்னுடன் இருக்கும் மாணவர்கள் எந்தக் கட்சியிலும் இருக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள். மேலும் போராட்டங்களின் போது என் மனைவியின் நகைகளை அடகுவைத்து போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன் எனவும் கூறியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்