சசிகலா, இப்படி அவசர அவசரமாக முதல்வராக்க வேண்டியதில்லை. பொதுமக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. முதலமைச்சராக வேண்டும் என்றால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இப்படி குறுக்கு வழியில் முதல்வராகக் கூடாது என காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை. யார் முதல்வராக வர வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களை கேட்டிருக்க வேண்டும் என ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.