ஆம், பெங்களூரு கோரமங்களா அருகே அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த 7 பேரில் ஒருவர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணா சாகர் என்பது குறிப்பிடத்தக்கது.