திரையரங்குகளில் அம்மா குடிநீர் விற்பனை செய்வது, அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் கட்டணம், திரையரங்குகளில் எம்.ஆர்.பி. விலையில் பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அபிராமி ராமநாதன் ஒப்புக்கொண்டுள்ளார்.
திரையரங்க கட்டணம் மற்றும் வரிகள் அதிகரித்துள்ள நிலையில் விஷால் கூறிய அனைத்தும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வர வாய்ப்பு உள்ளது. இல்லையேல் இருக்கவே இருக்கின்றது தமிழ் ராக்கர்ஸ் என்ற மனப்பான்மைதான் பொதுமக்களுக்கு ஏற்படும். அதிலும் குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.