இந்தியாவில் முன்பெல்லாம் இந்தியன் டாய்லெட் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்பொழுது நாடும் நாகரிகமும் முன்னேற, தற்பொழுது இந்தியன் டாய்லெட்டை விட்டுவிட்டு பல இடங்களில் வெஸ்ர்டன் கழிவறையே பயன்பாட்டில் இருக்கிறது. சிலருக்கு இந்த வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்த தெரிகிறது பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. அப்படி வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்த தெரியாமல் பெண் ஒருவர் பட்ட அவஸ்தை சம்பவம் தான் இது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அந்த ரயிலில் பாரதம்மா என்ற பெண் பயணம் செய்ய ஏறினார். ஏறியதும் அவர் கழிவறைக்கு சென்றார். அங்கிருந்த வெஸ்ர்டன் டாய்லெட்டை பயன்படுத்த தெரியாத பாரதம்மா, தெரியாமல் அங்கிருந்த இரும்பு தகடுக்குள் காலை விட்டுவிட்டார். பின்னர் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை.