இதனையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த நாட்டு மருந்தை சுமதி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்த சுமதி அங்கேயே இறந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.