சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மோசஸ்(19), என்பவர் அசோக்நகரில் பணியாற்றி வருகிறார். பணிமுடிந்து நள்ளிரவு 12.30 தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மோசஸிடம் ஒரு இளைஞர் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு அவருக்கு லிப்ட் கொடுத்தார்.
சிறிது தூரம் சென்றதும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், கத்திமுனையில் மோசஸின் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மோசஸ் அவரை மடக்கிப் பிடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அட்டி கொடுத்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோயம்பேட்டைச் சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.