முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன்: சூடு பிடிக்கின்றது குட்கா வழக்கு

ஞாயிறு, 24 நவம்பர் 2019 (18:20 IST)
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்காக அவர் டிசம்பர் 2ஆம் தேதி சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுளது
 
குட்கா முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக டிஜிபி ராஜேந்திரன் விசாரிக்கப்படவுள்ளார்.
 
டிஜிபி ராஜேந்திரன் மட்டுமின்றி வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன் அவர்களும் டிசம்பர் 3ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்