சந்திர கிரகணம் அன்று சிறுவன் நரபலி?: சாமியார் தலைமறைவு!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:28 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் சந்தேகத்துக்குறிய முறையில் மரணமடைந்துள்ளார். இந்த சிறுவன் சாமியார் ஒருவரால் சந்திரகிரகணம் அன்று நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.


 
 
வாணியம்பாடி அருகே உள்ள மேல்நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவியும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஹரிகேஷ் துளசி என்ற மகன் உள்ளார். இவர்கள் வீட்டுக்கு எதிரே ரவி என்ற சாமியார் மடம் ஒன்றை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
 
அந்த மடத்தில் 7 அடி உயரத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. அதில் ஆமைகளை வளர்த்தும், ரூபாய் நாணயங்களையும் போட்டு வைத்துள்ள்ளார். இவர் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை, பௌர்ணமி அன்று அந்த சாமியார் மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்வார். மேலும் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக பூஜை செய்வதாகவும் கூறுகிறார்கள்.
 
இந்நிலையில் முகனும் அவரது மனைவியும் காலை கூலித்தொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இரவு 7 மாணிக்கு வீட்டுக்கு திரும்பி வரும்போது  மகன் ஹரிகேஷ் துளசி வீட்டில் இல்லை. இதனால் பதறிய அவர்கள் சிறுவனை தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.
 
இதனையடுத்து வீட்டுக்கு எதிரே உள்ள சாமியாரின் மடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடப்பதை பெற்றோர்கள் பார்த்தனர். பின்னர் அங்கு கூடிய ஊர் மக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவன் ஹரிகேஷ் துளசியை சடலமாக மீட்டனர்.
 
இந்நிலையில் மடத்தின் சாமியால் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை சாமியார் சந்திர கிரகணம் அன்று நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சாமியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்