கன்னியாகுமரியில் சூரியகோடு பகுதியை சேர்ந்த பெண் ரெமி ப்ராங்கிளின். இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று கணக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார் ஒரு ஆசிரியை. அப்போது கரும்பலகையில் ஒரு கணக்கை கேள்வியை எழுதி அதற்கு பதில் எழுத சொல்லி ரெமியை கரும்பலகை அருகே நிற்க வைத்திருக்கிறார் ஆசிரியை. கணக்கை சரியாக பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துள்ளார் ரெமி. அதற்கு ஆசிரியை அனைத்து மாணவர்கள் முன்பு ரெமியை கேவலமாக பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு ரெமி அழவில்லை. சிறிது நேரம் நிற்க சொல்லி தண்டனையளித்த ஆசிரியை, பிறகு ரெமியை அமர சொல்லிவிட்டார். பெஞ்சில் சென்று அமர்ந்த ரெமி கரும்பலகையை பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்ததால் மற்ற மாணவிகளும் ரெமியின் செயலை கவனிக்கவில்லை. பாடம் நடத்தி முடித்து ஆசிரியை வெளியேற இருந்த சமயம் கூட ரெமி கரும்பலகையை பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார். ஆசிரையை பக்கத்தில் வந்து அவளை உசுப்பி விட்டிருக்கிறார். ஆனால் ரெமி அப்படியே முன்னால் இருந்த மேசையில் சரிந்து விழுந்தார்.
பதறிபோன ஆசிரியர் உடனே பள்ளி நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் ரெமியின் வீட்டுக்கு போன் செய்து “உங்கள் மகளுக்கு தலைவலியாக இருக்கிறது. நீங்கள் வந்து அழைத்து போங்கள்” என சொல்லியிருக்கிறார்கள். பதறியடித்து வந்த பெற்றோர் தங்கள் மகள் மயங்கி கிடப்பதை பார்த்திருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.