பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீா்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல்
திங்கள், 6 பிப்ரவரி 2023 (10:25 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான தீர்ப்பு கடந்த மாதம் இரண்டாம் தேதி வெளியான நிலையில் அதில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என்று நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஒரே ஒரு நீதிபதி மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.