சீமானால் ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது: மருதையன் டுவிட்..!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:45 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த நிலையில் சீமானால் பேனாவை அல்ல ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது என மக்கள் கலை இலக்கிய கழக முன்னால் செயலாளர் மருதையன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லவே இல்லை என நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டையிட்டது உண்மையா இல்லையா என அவரிடமே கேட்கலாம் என்றும் அவருக்கு கூறினார் 
 
சீமான் அண்ணனால் ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது என்றும் அவர் பேசியதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தனது மருதையன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
மக்கள் கலை இலக்கிய கழக முன்னாள் செயலாளர் மருதையன் அவர்களின் இந்த வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்