தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும், அவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அவர் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என மனு ஒன்றை பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது