சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏ.என்.32 விமானத்தை காணவில்லை

வெள்ளி, 22 ஜூலை 2016 (13:48 IST)
சென்னையில் இருந்து அந்தமான புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவானில் காணமல்போனது.


 

 
இன்று காலை விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், தாம்ரம் விமானப்படை விமானதளத்தில் இருந்து அந்தமான புறப்பட்டது. பொதுவாக விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும். 
 
ஆனால் இந்த விமானம் காலை 8.00 மணிக்கு மேல் எந்த கட்டுபாட்டு அறையுடனும் தொடர்பில் இல்லை என்பதால், நடுவானில் விமானம் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்த விமானத்தில் 29 பேர் கொண்ட குழு விமானத்தில் பயணித்துள்ளனர். தற்போது இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்