லஞ்ச லாவண்யங்கள் தலை விரித்தாடும் ஆட்சி... காங். அதிருப்தி!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (15:40 IST)
அதிமுக ஆட்சியில் லஞ்சம், லாவண்யங்கள் தலை விரித்தாடுவதாக வெளியேற்றப்பட்ட  காங்கிரஸ் ராமசாமி பேச்சு. 
 
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரின்போது நீட் தேர்வு குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையேயும், காரசாரமான வாக்குவாதம் நடந்தது. 
 
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் இது குறித்து பேசிய போது காங்கிரஸ் கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினார் என்ற கருத்து தெரிவித்தார். 
 
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் அருகே வந்து கூட்டமாக கோஷமிட்டனர். இதனை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரை பேச்சுக்கு எதிப்பு தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
 
நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் பேச தமிழக அரசுக்கு தைரியம் இல்லை என்றும் தொடந்து அவர்களிடம் பேச அஞ்சி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் இந்த ஆட்சியில் லஞ்சம், லாவண்யங்கள் தலை விரித்தாடுவதாகவும் எங்கு பார்த்தாலும் ஊழலில் அதிகாரிகள் மிதப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்