தஞ்சை அருகே பசுபதிகோயில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். புடவை வியாபாரம் செய்து வரும் இவருக்கு மணல்மேட்டுத்தெருவில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வீட்டில் 17 ஆண்டுகளாக ஒரு நாகபாம்பு வாழ்ந்து வருகிறது. அந்த நாகப்பாம்புக்காக அந்த வீட்டையே 17 ஆண்டுகளாக உபயோகிக்காமல் வைத்துள்ளனர் பிரகாஷ் குடும்பத்தினர்.
அவர் சிறு வயதில் அந்த வீட்டில் தன் பெற்றோருடன் தங்கியிருந்தபோது நல்ல பாம்பு ஒன்றை அவரது அம்மா அடித்து கொன்றுவிட்டாராம். அதன்பிறகு வீட்டிற்குள்ளேயே புற்று ஒன்று வளர அதற்குள் மற்றொரு நல்ல பாம்பு இருந்திருக்கிறது. அதை தொந்தரவு செய்ய வேண்டாமென முடிவெடுத்த பிரகாஷின் பெற்றோர்கள் அந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டார்கள்.