நண்பனுடன் நெருக்கம் காட்டிய மனைவி : கணவர் எடுத்த விபரீத முடிவு
புதன், 12 ஜூன் 2019 (15:26 IST)
நாமக்கல் மாவட்டம் தோட்டப் பகுதியில் தாய் மற்றும் ஒரு குழந்தை இருவரும் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ளது மாணிக்கவேலூர் கிராமம் . இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இக்கிராமத்துக்கு அருகே உள்ளது கஸ்தூரிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுரேஷ்.இந்த தம்பதிக்கு புகழ்வின் என்ற குழந்தை உள்ளது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் , சம்பவ நாளில் மூன்று பேரும் தங்களின் சொந்த தோட்டத்திற்குச் சென்றனர். இதையடுத்து மூன்று பேரும் வெகுநேரமாகி வீட்டுக்கு வராததால் அவர்களின் குடும்பத்தினர் தோட்டத்துக்குச் சென்றனர்.
அங்கு கௌரி மற்றும் குழந்தை புகழ்வின் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுரேஷும் கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து எருமப்பட்டி போலீஸாரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் இது தீவிர விசாரணை நடத்தினர். அதில் 4 நாள்களுக்கு முன்னர் சுரேஷின் நண்பர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கௌரியை பார்க்கச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு வந்துவிட்டு பல மணி நேரம் கழித்துதான் வீட்டைவிட்டு வெளியேறிதாகத் தெரிகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேக அடைந்த சுரேஷ் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்துவந்தனர்.
இந்நிலையில் சுரேஷ் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், என் நண்பர் வீரக்குமார் , என் மனவியுடன் பேசிவந்ததை வந்தது எனக்குப் பிடிக்கவில்லை. இதை என் மகனிடம் கடந்த 9 ஆம் தேதி கூறினேன். இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை வந்தது.நான் சந்தேகம் அடைந்ததால் மனைவி மனமுடைந்தார்.
பின்னர் தோட்டத்துக்கு செல்ல நாங்கள் தயாரானோம்..அப்போது அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நாங்கள் தோட்டத்துகு வந்த பின்னர் மயங்கிவிழுந்தார். மயங்கி வி்ழுந்தவரைக் காப்பாற்றாமல் அவர் கழுத்தை அறுத்துக்கொலை செய்தேன். குழந்தையையும் கொன்றேன். பிறகு நானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் என்னை காப்பாற்றிவிட்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.