நாகை மீனவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (08:08 IST)
நாகை மீனவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த பல ஆண்டுகளாக நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதும் படகுகளை தாக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் கலைச்செல்வன் என்ற மீனவருக்கு குண்டு பாய்ந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது தெரியவில்லை. இலங்கை கடற்படையினரா? அல்லது வேறு யாரேனுமா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விசாரணைக்கு பின் தான் உண்மை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது 
 
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மீனவர்கள் காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்