காயம் பற்றி இந்திய அணி அச்சம்பட தேவையில்லை… இன்சமாம் உல் ஹக் பேச்சு!
வியாழன், 29 ஜூலை 2021 (15:17 IST)
இங்கிலாந்துக்கு விளையாட சென்றுள்ள இந்திய அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுகின்றனர்.
இதனால் இலங்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் காயம் பற்றி இந்திய அணி கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் ஆஸி தொடரிலும் இப்படிதான் இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். ஆனால் இளம் வீரர்கள் அதை எளிதாகக் கடந்து வந்து வெற்றி பெற்றனர் எனக் கூறியுள்ளார்.