சாதிய பாகுபாட்டால் தமிழக மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி

சனி, 6 ஜனவரி 2018 (09:06 IST)
குஜராத் மருத்துவக் கல்லூரியில் சாதிய பாகுபாடு காரணமாக தமிழகத்தை சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் எவ்வளவு தான் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நாகரீகம் வளர்ச்சியடைந்திருந்தாலும் கூட, இன்னும் பல இடங்களில் மாறாது இருப்பது ஜாதிய பாகுபாடு. இதனால் மக்கள் பலர் துயரங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் இந்த பிரச்சனையால் வேதனையுற்று பலர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். 
 
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் என்ற இளைஞர், அஹமதாபாத்தின் பிஜே மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாரிராஜ் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. 
இந்நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் மயங்கிய நிலையில் விடுதி அறையிலிருந்த மாரிராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாரிராஜின் தற்கொலைக்கு கல்லூரியில் உள்ள சாதிய பாகுபாடு தான் காரணம் என்று அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். மாரிராஜ் உயிர் பிழைத்தால் மட்டுமே உண்மை நிலை என்னவென்பது தெரியும். போலீஸார் இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மாரிராஜின் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்