என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது
புதன், 14 நவம்பர் 2018 (08:03 IST)
குமரியில் என்ஜீனியரிங் மாணவியை ஏமாற்றி கற்பழித்த வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவன் சுஜித் (30). எம்.டெக். பட்டதாரியான இவன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான். இவனுக்கு எம்.இ பட்டதாரியான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், பின்னர் காதலர்களாக மாறினார்கள். பின்னர் சுஜித் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளான். இதனை செல்போனில் படமும் எடுத்துள்ளான்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சுஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவனோ உன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் பல லட்சம் ரூபாய் வரதட்சனையாக தர வேண்டும் என கேட்டுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சுஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.