அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (10:57 IST)
அரபிக்கடலில்  அக்டோபர் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் அக்டோபர் 17ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால்  இந்த மலை மேலும் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி புயலாக மாறுமா என்பதையும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்