கும்பமேளாவை உற்று கவனிக்கும் மாநிலங்கள்! – தனிமைப்படுத்தல் உத்தரவு!

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (11:23 IST)
ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் பணிகளில் பல மாநில அரசுகள் முக்கியத்துவம் காட்டி வருகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் லட்சங்களை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் லட்சக்கணக்கில் கும்பமேளாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களில் கும்பமேளாவுக்கு சென்ற மக்களை கண்காணிக்கவும், தனிமைப்படுத்தவும் மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அரசுகள் பல உத்தரவிட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்