ரூ.500 கோடி ஊழல்: ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மனுதாக்கல்!

புதன், 17 நவம்பர் 2021 (18:12 IST)
முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீது 500 கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் அவருடைய உதவியாளரும் அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூபாய் 500 கோடிக்கு கிராவல் மண் எடுக்க உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து ஓபிஎஸ் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விளக்கம் அளித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்கு இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் விரைவில் ஓபிஎஸ் மீது இந்த மனு வழக்கு பதிவு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்