அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சுக்கு அருந்ததியர் உள்பட பல்வேறு தரப்பினார் கடும் கண்டனங்கள் செய்து வந்தனர். மேலும் சீமான் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தர மாட்டோம் என்று பலர் பகிரங்கமாக தெரிவித்தனர்.