விவேகானந்தர் நினைவுப்பாறை - திருவள்ளுவர் சிலைக்கு நடைபாலம்: தமிழக அரசு அறிவிப்பு!

வியாழன், 10 மார்ச் 2022 (21:38 IST)
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் விவேகானந்தர் நினைவு பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் தவறாமல் பார்த்து வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
ஆனால் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தனித்தனியாக படகில்தான் சென்று வரவேண்டிய நிலை தற்போது உள்ளது. 
 
இந்த நிலையில் 37 கோடி செலவில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல்சார் நடை பாலம் ஒன்று அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது
 
 140 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படவுள்ள இந்த நடைப்பாலமானது மத்திய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்