தமிழகத்தின் பல பகுதியிலிருந்து தொழிலாளர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து லாரிகளிலும் வேன்களிலும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை கொண்டுவந்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் கோயம்பேடு சென்று வந்ததன் காரணமாகவே கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடலூர் சென்றவர்கள் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இவர்களில் 550 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதும் இந்த முடிவுகள் வந்த பின்னரே கடலூரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை உயருமா? என்பது தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கடலூரில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது