தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்பட பலரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகள் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சில வீடியோக்களை பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய அவர், திமுக அரசு மக்களை நேரடியாக சந்திக்க திராணியில்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.