6 முதல் 11ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம், லேப்டாப் இலவசம்: அதிரடி அறிவிப்பு..!

திங்கள், 13 மார்ச் 2023 (12:09 IST)
ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இனி சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 
 
புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடு வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் புதுவை மாநில அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சிபிஐ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் புதுச்சேரி பட்ஜெட்டில் முதல் அரங்கசாமி அறிவித்துள்ளார் 
 
புதுவை முதல்வர் ரங்கசாமியின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் அம்மாநில மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்