தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 31 மார்ச் 2020 (20:13 IST)
தமிழகத்தில் ஏற்கனவே 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் ஆக இன்று ஒரே நாளில் மேலும் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி பீல்ல் ராஜேஷ் அவர்கள் உறுதி செய்துள்ளார். இதில் 50 பேர் சற்றுமுன் உறுதி செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர்கள் சமீபத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று அறியப்பட்டு உள்ளதாகவும்  சுகாதாரத் துறை அதிகாரி பீல்ல் ராஜேஷ் கூறியுள்ளார் 
 
இதனையடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கண்டறியப்படும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாகவும் இதுவரை 515 கண்டறியப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் கண்டறிய பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1131 பேர் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் நேற்று வரை கட்டுக்குள் இருந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால் ஒரேநாளில் 50க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது                 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்