கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஸ்தம்பித்து போக வைத்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று எனும் மூன்றாம் நிலை பரவலுக்கு இன்னும் உருவாகவில்லை என்பதே ஒரே ஆறுதல்.
இந்நிலையில் கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்டுள்ளார். இதையடுத்து ரத்தன் டாடா 1500 கோடி ரூபாயும், அம்பானி 500 கோடி ரூபாயும் அளித்துள்ளனர். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களின் இரு நாள் சம்பளத்தை பிரதமர் நல நிதிக்காக கொடுத்துள்ளது. 2,56,000 ஊழியர்களின் சம்பளமான 100 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.