ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை செல்பி… கர்நாடக அரசின் சூப்பர் ஐடியா !

செவ்வாய், 31 மார்ச் 2020 (19:14 IST)
கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்களை வீட்டிலேயே தனிமைப் படுத்துவதற்காக கர்நாடக அரசு ஒரு சிறப்பான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஸ்தம்பித்து போக வைத்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று எனும் மூன்றாம் நிலை பரவலுக்கு இன்னும் உருவாகவில்லை என்பதே ஒரே ஆறுதல்.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் அல்லது கொரொனா நோயாளிகளோடு பழகியவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அந்த அறிவுரையை சரியாகக் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அவர்களை வீட்டுக்குள்ள்யே இருக்க வைக்க ஒரு செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செல்பி எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்த செயலி ஜிபிஎஸ் வசதியோடு இருப்பதால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அது கண்டுபிடித்துக்கொள்ளும். இதன் மூலம் வீடுகளை விட்டு வெளியே செல்வதைக் கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்